கட்டுமான நல வாரிய உறுப்பினர்களுக்கு நாளையும் பொங்கல் தொகுப்பு தொழிலாளர் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கட்டுமான நலவாரிய உறுப்பினர்கள், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் தொகுப்பு நாளை வரை வழங்கப்படுவதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

12 லட்சம் தொழிலாளர்கள்

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி வரை பதிவு செய்த 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 கட்டுமானத் தொழிலாளர்கள், ஓய்வூதியர்களுக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம், புடவை, பச்சரிசி, பருப்பு, எண்ணெய், நெய், வெல்லம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.

இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி சமீபத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழகத்தின் 260 மையங்களில் ஜனவரி 9-ம்தேதி முதல் 12-ம் தேதி (இன்று)வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான அவகாசம் ஜன. 13-ம்தேதி (நாளை) வரை நீட்டிக்கப்படுவதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

தாலுகா அலுவலகத்தில்..

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அசல்பதிவு அட்டையுடனும், ஒய்வூதியர்களாக இருப்பின் ஓய்வூதிய அசல் ஆணையுடனும் தாங்கள் வசிக்கும் தாலுகா அடங்கிய மையத்துக்கு முகக் கவசம் அணிந்து சென்று, தனி மனித இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

14 mins ago

விளையாட்டு

6 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

39 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்