பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500 கிசான் மோசடி கணக்கில் வரவு: பொன்முடி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: பொங்கல் பரிசாக தரும் ரூ.2,500-ஐ கிசான் நிதியுதவித் திட்ட மோசடிக் கணக்கில் வரவு வைக்கின்றனர் என்று பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பலரும் சேர்ந்து பணத்தைப் பெற்றனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இந்த மோசடி அதிகளவில் நடந்தது கண்டறியப்பட்டு, பணம் மீண்டும் அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு சிறப்புத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவுமான பொன்முடி கூறியது: பொங்கல் பரிசாக தரும் ரூ.2,500 பணத்தை வேளாண் துறையினர் வலுக்கட்டாயமாக பெற்று, கிசான் பணத்துக்காக அரசின் கணக்கில் சேர்க்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொங்கல் பரிசு தொகை வேறு; பிரதமரின் கிசான் திட்ட மோசடியில் விட்டப் பணத்தை திரும்ப வசூலிப்பது என்பது வேறு என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்