தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

By செய்திப்பிரிவு

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரதீப்குமார் வரவேற்றார்.

முதல்வர் சி.மதளைசுந்தரம் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்.

போதை தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் ஏ.ஜெய்சித்ரா பேசுகையில், போதைப் பொருட்களுக்கு வெறியூட்டும் தன்மை அதிகம். எனவே, போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது அவசியம் என்றார்.

உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச்செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன், போதை தடுப்பு தலைமைக் காவலர்கள் முரளிதரன், ராஜேந்திரன், சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துணை முதல்வர் என்.மாதவன், வேலைவாய்ப்பு அலுவலர் சி.கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இயந்திரவியல் துறை பேராசிரியர் ஏ.ராஜேஷ் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

20 mins ago

தமிழகம்

30 mins ago

இணைப்பிதழ்கள்

47 mins ago

இணைப்பிதழ்கள்

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்