வந்தவாசியில் விவசாயிகள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் வந்தவாசியில் விவசாயிகள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழவர் பேரவை சார்பில் நடைபெற்ற நூதன போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்தாண்டை விட, கூடுதலாக 30 சதவீதம் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. நவம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால், பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், உளுந்து, மணிலா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஓர் ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் சேதங்களை கணக்கிட வேண்டும் என தமிழக அரசு அறிவித்தும், சேதமடைந்துள்ள பயிர்களை கணக்கிட வேளாண் அலுவலர்கள் வரவில்லை. விவசாயிகள் கொடுக்கும் மனுவையும் பெற்றுக் கொள்ளவில்லை. டிசம்பர் மாதம் வரை மழை தொடரும் என்பதால், பயிர் சேதம் மேலும் அதிகரிக்கும். எனவே, பயிர் சேதங்களை கணக்கிடாமல் உள்ள வேளாண் உதவி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

பின்னர், வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் எதிரே முளையிட்ட நெல் கதிருக்கு மாலையிட்டு, வெற்றிலை வாழைப்பழம் படையலிட்டு, ஒப்பாரி வைத்து, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வேளாண் உதவி இயக்குநரிடம் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

விளையாட்டு

8 mins ago

இணைப்பிதழ்கள்

34 mins ago

தமிழகம்

44 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்