வேலூர் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் :

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முக்கிய ஏரியான சதுப்பேரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. அவ்வாறு வரும் மழைநீர் அருகாமையில் உள்ள குடியிருப்புப்பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொணவட்டம், நேதாஜி நகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை மழைநீர் சூழ்ந்தது. இதனால், அங்கு சில குடும்பத்தினர் மழைநீரில் சிக்கினர். இது குறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் விரைந்து சென்று மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். சதுப்பேரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால் பிற ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பி விடும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் நேற்ற முன்தினம் இரவு முதல் விடிய,விடிய மழை பெய்தது. ஆம்பூர், வாணியம்பாடி, வடபுதுப்பட்டு, நாட்றாம்பள்ளி, கலவை, வாலாஜா, அரக்கோணம்,ஆற்காடு, சோளிங்கர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

7 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

7 mins ago

இந்தியா

25 mins ago

க்ரைம்

42 mins ago

இந்தியா

52 mins ago

விளையாட்டு

41 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்