போக்குவரத்து நெரிசலை குறைக்க - கோயம்பேடு மேம்பாலத்தை திறக்க வேண்டும் : எதிர்க்கட்சி தலைவர் கே.பழனிசாமி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோயம்பேடு, வேளச்சேரி, மேட வாக்கத்தில் மேம்பாலப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அவற்றை உடனடியாக திறக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி வலியுறுத் தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2017-க்கு பின், சென்னையில் கோயம்பேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மிகப்பெரிய உயர்மட்டப் பாலத்தை ரூ.100 கோடி செலவில் கட்ட அதிமுக அரசு ஒப்புதல் அளித்து, 95 சதவீத பணிகள் கடந்தாண்டு டிசம்பரில் முடிந்திருந்தது.

தற்போது பாலப்பணிகள் முழுமையடைந்துள்ள நிலையில், பயன்பாட்டுக்கு கொண்டுவரப் படாததால், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுறுகின்றனர். குறிப்பாக, கடந்த 13-ம் தேதி நவராத்திரியை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் பணி யாற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே சமயத்தில் கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் முற்றுகையிட்டனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியதாக செய்தி கள் வந்துள்ளன.

அதிமுக அரசில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து நெரி சலைக் குறைக்க கட்டப்பட்ட பாலங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு உடனுக்குடன் திறக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போது கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு உடனுக்குடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், சென்னையில் அதிமுக அரசால் தொடங்கப்பட்ட வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே ரூ.110 கோடி செலவி லான, வேளச்சேரி இரண்டு அடுக்கு மேம்பாலத்தின் முடிந்த பகுதியையும், ரூ.146 கோடியில் கட்டப்படும் மேடவாக்கம் மேம்பாலத்தையும் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்