வடிகால் வாய்க்கால்களை தூர் வார கோரிக்கை :

By செய்திப்பிரிவு

காரைக்காலில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், காரைக்கால் நகரப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்குகிறது.

இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, அடைமழை பெய்தால், அதிகளவில் நீர்தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு சிரமம் ஏற்படும். எனவே, சாலை உள்ளிட்ட இடங்களில் தேங்கும் மழைநீரை விரைவாக வடியச் செய்யும் வகையில் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என்று காரைக்கால் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து காரைக்காலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.எம்.இஸ்மாயில் கூறியது: பருவமழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், நகரப்பகுதியில் உள்ள வடிவாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்து காணப்படுகின்றன.

நகரப் பகுதியில் 10-க்கும் குறைவான வடிகால்களே உள்ளன. அதனால் அலட்சியம் காட்டாமல் அவற்றை தூர் வார பொதுப்பணித் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நூலாற்று வடிகாலில் ஆகாயத் தாமரை செடிகள் அதிக அளவில் மண்டிக் கிடக்கின்றன. அவற்றை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்