காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்கும் பரிந்துரையை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பதற்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. இதைக் கண்டித்து, தஞ்சாவூர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன்பு 4 அரசு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், முகவர்கள், பாலிசிதாரர்கள் ஆகியோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, மதுரை மண்டலக் குழு உறுப்பினர் சத்தியநாதன் தலைமை வகித்தார். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் த.பிரபு தொடங்கி வைத்தார். காப்பீட்டு ஊழியர் சங்கச் செயலாளர் செல்வராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கோதண்டபாணி, எல்ஐசி முகவர்கள் சங்க மாநிலச் செயலாளர் என்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், “இன்சூரன்ஸ் தனியார்மயம் மக்கள் விரோதம், பாலிசிதாரர்களின் நலன் காக்க தனியார்மய அறிவிப்பைக் கைவிட வேண்டும்” என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

3 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்