திருநள்ளாறில் தனியாரிடமிருந்து மீட்கப்படும் பஞ்சாயத்துக்குரிய இடத்தில் ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

காரைக்கால்: திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தனியார் சிலரின் வசம் இருந்தது கண்டறியப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், அந்த நிலம் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமானது என கடந்த 24.7.2020-ல் காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை கொம்யூன் பஞ்சாயத்து பெயருக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பஞ்சாயத்து நிர்வாகம் மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த நிலத்தை ஆட்சியர் அர்ஜூன் சர்மா அண்மையில் நேரில் பார்வையிட்டார். அப்போது, நிலம், வழக்கின் தீர்ப்பு குறித்து ஆட்சியருக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் என்.ரவி விளக்கினார். வட்டாட்சியர் பொய்யாதமூர்த்தி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். நிலத்தை கொம்யூன் பஞ்சாயத்துக்கான பெயரில் மாற்றுவதற்குரிய நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு ஆணையருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்