மர்மமான முறையில் ஆடுகள் உயிரிழப்பு உடுமலையில் பயனாளிகள் கவலை

By செய்திப்பிரிவு

உடுமலையில் அரசால் வழங்கப்பட்ட விலையில்லா ஆடுகள் இறந்ததால் பயனாளிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆடுகள் வாங்காமலேயே அரசின் தொகையை பெற்று ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலரது ஆடுகள் திடீரென இறந்ததால் அதன் பயனாளிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பயனாளிகள் கூறும்போது ‘‘இப்பகுதியில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 20 ஆடுகள் பலியாகியுள்ளன. இதுகுறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். கால்நடைத் துறை உதவி இயக்குநர் ஜெயராமன் கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்ட பகுதியில் கால்நடைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொடர் மழை காரணமாகவும் ஆடுகள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. எனினும் ஆடுகளுக்கு காப்பீடு செய்துள்ள பயனாளிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்