விருத்தாசலம் அருகே கம்மாபுரத்தில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரத்தில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு கனமழை பெய்தது. மணல்மேடு அருகே உள்ள என்எல்சி வடிகால் வாய்க் கால் தூர்வார படாததால் மழை தண்ணீர் வடிய வழியில்லை. கம்மாபுரம் குடியிருப்பு பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. தெருக்களில் ஆறுபோல மழை தண்ணீர் ஓடுகிறது. வீடுகளில் மழைநீர் புகுந்ததால் சாலைகளில் மக்கள் அமர்ந்துள்ளனர். மழைநீரால் கம்மாபுரம், சு.கீனனூர் பகுதியில் 100 ஏக்கர் நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இப்பகுதிக்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். என்எல்சி வாய்க்காலை முறையாக தூர் வார வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவ லறிந்த கம்மாபுரம் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் பேசி அவர்களை கலைய செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்