புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு பொங்கல் திருநாளில் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று இரவு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக் கையினை அமைச்சரவை ஒப்புதலுடன் தாக்கல் செய்யும்போது தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை மாற்றி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சுமார் 3.50 லட்சம்குடும்ப உணவு பங்கீட்டு அட்டையில் உள்ள அனைத்து நபர்களும் மருத்துவ சிகிச்சை பெறும்வகையில் அனைவருக்குமான ஒட்டுமொத்த முழு சுகாதார பாதுகாப்பு காப் பீட்டுத் திட்டம் ஒன்றினை அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு நமது அரசின் சுகாதாரத்துறை, நிதித்துறை மற்றும் சட்டத்துறை ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளன. மத்திய அரசின் தேசிய சுகாதார நிறுவனமும் புதுச்சேரி அரசின் இந்தத் திட்டத்தை பிரதமர் ஜன ஆரோக்கிய திட்டத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு அமைச்சரவை, சட்டப்பேரவை, சம்மந்தப்பட்ட துறைகள் மற்றும் மத்திய அரசின் தேசிய சுகாதார நிறுவனம் உட்பட அனைவரும் ஒப்புக்கொண்ட இந்த அனைவருக்குமான சுகாதாரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான அரசு ஆணை வழங்கிட ஏதுவாக துணைநிலை ஆளுநருக்குக் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி புதுச்சேரியில் உள்ள சுமார் 3.50 லட்சம் குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 60 சதவீத காப்பீட்டுத் தொகையை மத்திய அரசின் தேசிய சுகாதார நிறுவனமும், மீதி 40 சதவீதம் தொகையினை புதுச்சேரி அரசும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு புதுச்சேரி அரசு 100 சதவீத காப்பீட்டுத் தொகையினையும், மீதமுள்ள 1.75 லட்சம் குடும்பங்களுக்கு நமது புதுச்சேரி அரசு 100 சதவீத காப்பீட்டுத் தொகையினையும் வழங்கிடும் வகையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான அரசாணை துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு வெளியிடப்படும். இதற்கான ஒப்புதலை தங்குதடையின்றி புதுச்சேரி மாநில அனைத்து மக்களின் நலன் கருதி துணைநிலை ஆளுநர் விரைவில் அளிப்பார் என நம்புகிறேன். அதன்பின்னர் புதுச்சேரியில் குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை வைத்துள்ள அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எங்கு வேண்டுமானாலும் அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வருடத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைஎடுத்துக் கொள்ளலாம்.

இத்தகு திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் மருத்துவ காப்பீடு பெறும்வகையில் புதுச்சேரி அரசால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்தவரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டத்தினைப் பொங்கல் திருநாளில் புதுச்சேரி மக்களுக்கான பொங்கல் பரிசாக அளிப்பதில் மகிழ்ச்சியடை கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்