அழகப்பா பல்கலை.யில் முப்பெரும் விழா

By செய்திப்பிரிவு

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பொங்கல், திருவள் ளுவர் தினம், ஆசிரியர் தினம் ஆகிய முப்பெரும் விழாக்கள் நடந்தன.

அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பதிவாளர் (பொ) வசீகரன் வரவேற்றார்.

மதுரை காமராசர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வ.சுப மாணிக்கனார் தமிழில் எழுதிய வள்ளுவம் என்ற நூலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் செல்லப்பன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அந்த நூலை குன்றக்குடி பொன் னம்பல அடிகளார் வெளியிட துணைவேந்தர் ராஜேந் திரன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில், ஒரு பேரிடரின் பதிவுத் தொகுப்பு என்ற நூல் வெளியிடப்பட்டது.

விழாவில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், சாதி, சமய அடையாளங்களைத் தாண்டிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் அறிவுக் கருவூலம் திருக்குறள் அந்நூல் மனித வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் தாண்டி, அனைவருக்கும் வழி காட்டி வருகிறது என்றார். பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் 9 ஆசிரியர்களும், அலுவலர் ஒருவரும் கவுரவிக்கப்பட்டனர்.

ரூசா 2.0 திட்டத்தில் தர மான கற்றல், ஆய்வுகளால் பல்கலைக்கழகக் குறியீட்டை 84 ஆக உயர்த்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்