மாநகரில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் - மனைகளை வரன்முறை செய்ய விண்ணப்பங்கள் குவிந்தன :

By செய்திப்பிரிவு

கோவை மாநகரில் அனுமதியற்ற மனைகளை வரன்முறை செய்ய நடைபெற்ற சிறப்பு முகாமில் 1,146 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் விற்கப்பட்ட தனி மனைகளை வரன்முறை செய்து கொள்ள, ஐந்து மண்டல அலுவலகங்களிலும் நேற்று முன்தினம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மொத்தமாக வரப்பெற்ற 1,146 விண்ணப்பங்களில் 464 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வடக்கு மண்டலத்தில் வரப்பெற்ற 239 விண்ணப்பங்களில் 23 மட்டுமே தகுதியானவை. இதில் ஒரு விண்ணப்பத்துக்கு வரன்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் வரப்பெற்ற 174 விண்ணப்பங்களில் 40-ம், மேற்கு மண்டலத்தில் வரப்பெற்ற 126 விண்ணப்பங்களில் 124-ம், தெற்கு மண்டலத்தில் வரப்பெற்ற 100 விண்ணப்பங்களில் 48-ம், மத்திய மண்டலத்தில் வரப்பெற்ற 47 விண்ணப்பங்களில் 36-ம் தகுதியானவை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்த விண்ணப்பங்களில் 464 தகுதியானவை, 222 தகுதியற்றவை. 460 விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. மனை வரன்முறை செய்ததில் வரப்பெற்ற மொத்த தொகை ரூ.11 லட்சத்து 54,150 ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

36 mins ago

சுற்றுச்சூழல்

46 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

41 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்