ஆசனூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம் :

By செய்திப்பிரிவு

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். காரில் சென்ற நபர்கள் அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனிடையே வாகனங்கள் நிற்பதைக் கண்ட சிறுத்தை சிறிது நேரத்திற்குப் பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

தகவலறிந்து வந்த ஆசனூர் வனத்துறையினர் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சினிமா

6 mins ago

கருத்துப் பேழை

41 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்