குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றின் - கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் : மாற்று இடம் வழங்க நடவடிக்கை; ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

By செய்திப்பிரிவு

குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்துள்ள வீடுகள் அகற்றப்பட்டு அவர்கள் மாற்று இடத்தில் குடியமர்த்தப் படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுன்டன்யா நதி ஆக்கிரமிப்பு மற்றும் பேரணாம்பட்டு கொட் டாற்றில் கழிவுநீர் கலப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப் பினர் அமலு விஜயன், வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன், குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுசில்தாமஸ், வட்டாட்சியர் லலிதா, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆந்திர மாநிலம் கவுன்டன்யா வனப்பகுதியில் புங்கனூரில் இருந்து பலமநேர் வழியாக சுமார் 25 கி.மீ பயணித்து தமிழக எல்லையான சைனகுண்டா பகுதியில் நுழைகிறது.

அங்கிருந்து குடியாத்தம் நகரம் வழியாக சுமார் 12 கி.மீ பயணித்து ஐதர்புரம் அருகே பாலாற்றுடன் கலக்கிறது. பாலாற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றாக கவுன்டயான நதி உள்ளது.

குடியாத்தம் நகரின் வழியாக ஓடும் கவுன்டன்யா நதியின் கரையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. வெள்ளம் ஏற்படும் காலத்தில் பாதிப்பு ஏற்படுவதுடன் குப்பைகள் கொட்டியும் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரம் இல்லாமல் உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பேரிடர் பாதிப்புகளை தடுக்கும் வகையில் ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும். தற்போது, 800 வீடுகள் கட்டப்பட்டு வரும் இடத்தில் அவர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆற்றில் குப்பை கொட்டுபவர் களிடம் நகராட்சி நிர்வாகம் அபராதம் வசூலிக்க வேண்டும். ஆற்றின் கரையைின் எல்லையை வரையறுத்து தடுப்புச் சுவர் கட்டப்படும். கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடப்படும்’’ என்றார்.

இதனைத் தொடர்ந்து, பேரணாம்பட்டு கொட்டாற்றில் கழிவுநீர் கலப்பதையும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்