பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் கதறி அழுது மனு கொடுத்த பெண்கள் :

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொருக்கை கிராமத்தில், கண்ணன் மேடு என்ற பகுதியில் 110 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாதவராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அப்பகுதியில் வசிப்பவர்களை காலிசெய்ய வருவாய்த் துறையினர் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் நேற்று திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, வட்டாட்சியர் அலெக்ஸாண்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், “இந்தப் பகுதியில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எனவே, ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்து எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர். அப்போது, சில பெண்கள் வட்டாட்சியரின் முன் கீழே விழுந்து வணங்கியபடி கதறி அழுததால், அதிர்ச்சியடைந்த வட்டாட்சியர் உடனடியாக அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

கருத்துப் பேழை

21 mins ago

சுற்றுலா

58 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

5 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்