நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வு :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டிடங் களை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.338 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது, கல்லூரி வகுப்பறைக் கட்டிடம், நிர்வாக அலுவலகம், ஆய்வகம், டீன் அலுவலகம், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் இம்மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இக்கட்டிடத்தை நேற்று நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

அப்போது மருத்துவக்கல்லூரியின் கட்டிடங்கள் அமைந்துள்ள வரைபடம், நிர்வாக அலுவலகம், மாணவர்களுக்கான வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்