மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மீண்டும் ‘ஹேப்பி ஸ்கூல்’செயல்படுத்த திட்டம் : ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தகவல்

By செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சிபள்ளிகளில் ஹெச்சிஎல் உதவியுடன் ‘ஹேப்பி ஸ்கூல்’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் தலை மையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மதுரை மாநகராட்சி ஹெச்.சி.எல். நிறுவனத்தின் உதவியு டன் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மாநகராட்சி பள்ளிகளில் ‘ஹேப்பி ஸ்கூல்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வந்தது. கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் இந்த திட்டம் நின்றுபோனது.

கரோனா காலத்தில் குடும்ப பொருளாதார மாறுதல்களால் ஏற்பட்டுள்ள நிலை, இணைய, தொலைக்காட்சி பயன்பாட்டு வேறுபாடுகளால் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளி போன் றவற்றால் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். அதனால், மதுரை மாநகராட்சி மாணவர்களின் உடல், மன சமூகப் பழக்க நலன்கள் சார்ந்த செயல்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்தி அதன்மூலம் கற்றல் சூழலை மேம்படுத்தி மகிழ்சியான, நிறைவான கல்வியை வழங்க ஹேப்பி ஸ்கூல் திட்டம் மீண்டும் தொடங்கப்படுகிறது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்தி கேயன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகராட்சியின் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரிய ர்கள் பங்கேற்றனர்.

ஆணையாளர் கா.ப.கார்த்தி கேயன் பேசுகையில், ‘‘இத் திட்டத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு மனநல ஆலோசகராக செயல்படுவார். இதற்கான சிறப்பு பயிற்சிகளை ஹெச்.சி.எல். நிறுவனத்தின் உதவியுடன் எம்.எஸ். செல்லமுத்து அறக் கட்டளை ஆராய்ச்சி மையம் வழங்கும். மாணக்கர்கள் தமது கருத்துக்க ளையும், கவலைகளையும் தெரி விக்க ஆலோசனைப்பெட்டி மற்றும் தொலைபேசி ஆலோசனை மையம் செயல்படுத்தப்படும்.

பள்ளிகள் திறக்கப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவ டிக்கைகள் குறித்தும், ஒருவேளை கரோனா சூழலால் தொலைகாட்சி மற்றும் இணையவழி கல்வி தொடரும்பட்சத்தில் அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நட வடிக்கைகள் குறித்தும் ஆலோ சித்து தெரிவிக்கப்படும் என்றார்.

எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை தலைவர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், கல்வி அலுவலர் பொ.விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்