சீருடை பணியாளர் பணி - விழுப்புரத்தில் 2-ம் நாள் நடந்த உடற்தகுதி தேர்வில் 351 பேர் தகுதி :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 2,256 ஆண்கள், 700 பெண்கள் என 2,956 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் நாளில் உடற்தகுதி தேர்வில் பங்கேற்றவர்களில் 330 பேர் அடுத்தகட்டமாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறும் உடற்திறன் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

இதனை தொடர்ந்து, 2-ம் நாளாக நேற்று ஆண்களுக்காக நடந்த உடற்தகுதி தேர்வில் பங்கேற்க 503 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவர்களில் 95 பேர் தேர்வுக்கு வரவில்லை. 408 பேர் வந்திருந்தனர். அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் உடற்தகுதி தேர்வு நடந்தது. அவர்களுடைய உயரம் சரிபார்க்கப்பட்டதில் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை விட குறைவாக இருந்ததாக 25 பேரும், மார்பளவு சரிபார்த்தலின்போது 14 பேரும் என மொத்தம் 39 பேர் வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் மீதமுள்ள 369 பேருக்கு 1,500 மீட்டர் ஓட்டம் நடந்தது. இதில் 351 பேர் நிர்ணயிக்கப்பட்டிருந்த 7 நிமிடத்திற்குள் வேகமாக ஓடி இலக்கை அடைந்து, அடுத்தகட்டமாக நடைபெறும் உடற்திறன் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இலக்கை அடைய முடியாத 18 பேர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, இன்றும் ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடக்கிறது.

...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்