கரோனாவை கட்டுப்படுத்த தன்னார்வலர்களாக பணியாற்றிய - 119 மாணவர்களுக்கு ரூ.10,000 சிறப்பூதியம் : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வழங்கி கவுரவிப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் கரோனாவை கட்டுப்படுத்த தன்னார்வலர்களாக பணியாற்றிய துணை மருத்துவக் கல்வி பயிலும் மாணவ - மாணவியர் 119 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் சிறப்பு ஊதியத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வழங்கி கவுரவித்தார்.

புதுச்சேரியில் கரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசுடன் இணைந்து பணியாற்றிய தன்னார்வலர்களின் பங்களிப்பை, குறிப்பாக துணை மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக புதுச்சேரியில் உள்ள அன்னை தெரசா சுகாதார பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 119 மாணவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் சிறப்பு ஊதியத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை வழங்கினார்.

சுகாதாரத் துறை ஏற்பாடு செய்திருந்த விழாவில், பொதுப்பணித்துறைச் செயலர் மற்றும் கரோனா பொறுப்பு அதிகாரி விக்ராந்த் ராஜா, சுகாதாரத் துறைச் செயலர் அருண், அன்னை தெரசா நிறுவனத்தின் புல முதல்வர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசும்போது, "புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தன்னார்வலர்கள், குறிப்பாக இளைஞர்கள் பக்கபலமாக இருந்து வருகின்றனர். இளைஞர்களின் ஒத்துழைப்பு கரோனா தடுப்பு முன்னணி பணியாளர்களுக்கு அதிக பலத்தை கொடுத்தது. இக்கட்டான சூழ்நிலையை மிகச் சிறப்பாகக் கையாள இளைஞர்கள் துணை புரிந்திருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையைக் கையாள்வதில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

களப்பணியாளர்களாக செயல்பட்டிருப்பதால் கரோனா உங்களை அனுபவசாலிகளாக மாற்றியிருக்கிறது. வேறு எந்த மாநிலத்தை விடவும் புதுச்சேரியில் கரோனா சிறப்பான முறையில் கையாளப்பட்டிருக்கிறது என்பதில் நமக்கு பெருமை உண்டு. கரோனா நமக்கு பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள நட்பு, உறவு, பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கான, அணுகுவதற்கான சூழலை கரோனா தந்திருக்கிறது. இளைஞர்கள் அனைவரும் சேவை மனப்பான்மைபோடு பணியாற்ற வேண்டும்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

வணிகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்