திருவொற்றியூரில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் - சுரங்கப் பாதை அமைக்க மக்கள் வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

திருவொற்றியூரில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், அங்கு புதிதாக சுரங்கப் பாதைஅமைக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் முக்கிய வழித்தடத்தில் திருவொற்றியூர் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. சத்தியமூர்த்தி நகர், அண்ணாமலை நகர், காமராஜர் நகர், கிருபை நகர் உட்பட 15-க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிராட்வே, கடற்கரை, தாம்பரம், மணலி போன்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்ல இந்த ரயில்வே கேட்டை கடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், பொதுமக்கள் அவதிப்படு கின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.வி.வால்டர், அருள், திருமாவள்ளுவன் ஆகியோர் கூறும்போது, ‘‘திருவொற்றியூர் ரயில்வே கேட் வழியாக விரைவு, சரக்கு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களை பல்வேறு பகுதிகளுக்கு அதிகளவில் இயக்குவதால், அடிக்கடி கேட் மூடப்படுகிறது. இதனால் நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மக்கள் அதிகளவில் செல்வதால் அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆகின்றன. எனவே, மக்களின் அத்தியாவசிய தேவையாக இதைக் கருத்தில் கொண்டு இங்கு புதிய சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்