ஒரு மூட்டை நிலக்கடலை ரூ.1,800-க்கு விற்பனை - கொள்முதல் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை :

By செய்திப்பிரிவு

சிவகங்கை பகுதியில் ஒரு மூட்டை நிலக்கடலையை வியாபாரிகள் ரூ.1,800-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், கல்லல், சிங்கம்புணரி, எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயிரிட்டிருந்த நிலையில் தற்போது நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இந்தாண்டு நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில், கரோனா சூழ்நிலையால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. 40 கிலோ கொண்ட மூட்டை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2,400 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் இந்தாண்டு ரூ.1,800-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதுகுறித்து சாத்தனி விவசாயி வீரபத்திரபிரபு கூறுகையில், ‘கிணற்றுப் பாசனம் மூலம் 4 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரத்துக்கு மேல் செலவழித்துள்ளோம். ஏக்கருக்கு 25 மூட்டைகள் வரை மகசூல் கிடைத்துள்ளது. ஆனாலும் உரியவிலை கிடைக்காததால் நஷ்டம்தான். இதனால் சிலர் நிலக்கடலையை விற்காமல் வீடு களிலேயே தேக்கி வைத்துள்ளனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்