சர்க்கார்பதி மலைப் பகுதியில் கனமழை : ஊட்டுக்கால்வாயில் வெள்ளப்பெருக்கு :

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: ஆனைமலை அடுத்த சர்க்கார்பதியில் கொழும்பன்மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் வனப் பகுதியில் உள்ள சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காண்டூர் கால்வாய், ஆழியாறு ஊட்டுக் கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்தது. ஆழியாறு ஊட்டுக் கால்வாய் அகலம் குறைவாக இருப்பதால், கரைகள் பாதிக்கக் கூடும் என்பதால், பொதுப்பணித் துறையினர் நள்ளிரவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கால்வாயின் பாதுகாப்பு கருதி, ஊட்டுக் கால்வாயில் அமைந்துள்ள மதகுகளின் கதவுகளை திறந்துவிட்டனர். இதனால் உபரி நீர் பனப்பள்ளம் ஓடை வழியாக வெளியேறி அப்பகுதியில் உள்ள தென்னந் தோப்புகளில் தேங்கியது. கனமழையால் வனப் பகுதியில் உள்ள குட்டைகளில் நீர் நிரம்பியது. இதனால் கோடைகாலத்தில் வன விலங்குகள் தண்ணீர் தேடி பட்டா நிலங்களுக்கு வரும் நிலை ஏற்படாது என வனத் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

ஆன்மிகம்

12 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

மேலும்