கார் பரிசு விழுந்ததாகக் கூறி ரூ.1.92 லட்சம் மோசடி : கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் கார் பரிசு விழுந்ததாகக் கூறி ரூ.1.92 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி நகர் வெள்ளக் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (44). இவர் அக்ரோ சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 25-ம் தேதி இவரது செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், தான் கார் நிறுவனத்தின் முகவராக உள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், வரதராஜனுக்கு கார் பரிசு விழுந்துள்ளதாகவும், இதற்கு டெலிவரி கட்டணமாக ரூ. ஒரு லட்சத்து 92 ஆயிரத்தை தனது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனை நம்பிய வரதராஜன், மர்ம நபரின் வங்கிக் கணக்கிற்கு செல்போன் செயலி வழியாக பணம் செலுத்தினார். ஆனால் காரும் வரவில்லை. மர்ம நபர் தொடர்பு கொண்ட செல்போனில் தொடர்பு கொண்டபோது பதிலும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வரதராஜன், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்