தருமபுரி நகராட்சியில் கரோனா தடுப்பு பணி தீவிரம் :

By செய்திப்பிரிவு

தருமபுரி நகராட்சியில் கரோனா தடுப்பு பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி தருமபுரி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி மற்றும் பொது சுகாதார அலுவலர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணியில் தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரும் வீடு, வீடாகச் சென்று வழங்கப்படுகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி, நோய் பரவாமல் தடுக்கும் பணி, மருத்துவ முகாம்கள், கூட்டு துப்புரவு பணி உள்ளிட்டவை மேற்கொண்டு வருகின்றனர்.

நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே வர வேண்டாம். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வை மக்களிடையே நகராட்சி ஊழியர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

23 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்