கரோனா பாதுகாப்பு நடவடிக்கை - 11 வணிக நிறுவனங்கள் கோவில்பட்டியில் மூடல் :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்கள் நகராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தலால் மூடப்பட்டன.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை என, தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலை, அண்ணா பேருந்துநிலைய பகுதி, ஏ.கே.எஸ். தியேட்டர் சாலை, இளையரசனேந்தல் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், காஜா, மண்டல துணை வட்டாட்சியர் அறிவழகன், காவல் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, 3,000 சதுர அடிக்கு மேல் அமைக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருந்த ஜவுளிக்கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட 11 வணிக நிறுவனங்களை மூடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து, அந்தந்த ஊழியர்கள் தங்களது நிறுவனங்களை மூடினர். மறுஉத்தரவு வரும் வரை கடைகளை திறக்க வேண்டாம் என, அவர்களிடம் அலுவலர்கள் அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

24 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்