கோவையிலிருந்து இயக்கப்படும் : 8 சிறப்பு ரயில்கள் ரத்து :

By செய்திப்பிரிவு

பயணிகள் எண்ணிக்கை குறை வால் கோவையில் இருந்தும், கோவை வழியாகவும் இயக்கப் படும் 8 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்டரயில்வே அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பின்வரும் சிறப்பு ரயில்கள்தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல்-கோவை இடையேயான சதாப்தி சிறப்பு ரயில் (எண்:06029) வரும் 29-ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, கோவை-சென்னை சென்ட்ரல் இடையேயான சதாப்தி சிறப்பு ரயில் (எண்:06030), கோவை-கேஎஸ்ஆர் பெங்களூரு இடையேயான உதய் சிறப்பு ரயில் (எண்:06154), கேஎஸ்ஆர் பெங்களூரு-கோவை இடையே யான உதய் சிறப்பு ரயில் (எண்:06153), கோவை வழியாக இயக்கப்படும் கொச்சுவேலி-பனஸ்வாடி இடையேயான ஹம்சாஃபர் சிறப்பு ரயில் (எண்:06319) ஆகியவை வரும் 29-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன.

பனஸ்வாடி-கொச்சுவேலி இடையேயான ஹம்சாஃபர் சிறப்பு ரயில் (எண்:06319) வரும் 30-ம் தேதி முதலும், கோவை போத்தனூர் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்-பனஸ்வாடி இடேயேயான சிறப்பு ரயில் (எண்:06129) வரும் மே 3-ம் தேதி முதலும், பனஸ்வாடி-எர்ணாகுளம் இடையேயான சிறப்பு ரயில் (எண்:06130) வரும் மே 4-ம் தேதி முதலும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்