பிளஸ் 2 பொதுத்தேர்வு - ஒத்திவைக்கப்பட்டதற்கு ஆசிரியர் அமைப்பு வரவேற்பு :

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதை ஆசிரியர் அமைப்பு வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

சிபிஎஸ்இ தேர்வுகள்

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. பல நகரங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் தீவிரம் காரணமாக, மத்திய அரசு சிபிஎஸ்இ 12-ம்வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைத்துள்ளது.

மேலும், 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது.

எனவே, மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு மே 5-ம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று, பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப் படுவதாகவும் செய்முறைத் தேர்வுகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம்.

இவ்வாறு ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்