மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது - நிவாரண தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை :

By எஸ்.முஹம்மது ராஃபி

தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலம் தொடங்கி உள்ள நிலையில், நிவாரணத் தொகை யை உயர்த்துவதோடு தாமதமின்றி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவளத்துறை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கடற்பகுதியில் மீன் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில்கொண்டும், மீன் வளத்தைப் பாதுகாத்திடும் பொருட் டும் ஏப். 15 முதல் ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய தமிழகத்தின் 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐடியூசி மீனவர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் கூறியதாவது:

45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதம் மீன்பிடித் தடைக்காலமாக அதிகரித்துள்ள நிலையிலும் ரூ.5,000-ம் தான் நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையும் ஜூன் மாதம் தாமதமாகவே மீனவர் களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் கரோனா பரவல் கார ணமாக கடந்த ஆண்டில் 3 மாதங் கள் வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் தாமதிக்காமல் மீனவர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

மேலும் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவதைப் போன்று தமிழக மீனவர்களுக்கும் இல வசமாக வழங்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

43 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்