கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் - 900 பேருக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் 900 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் 900-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் அங்கு அண்மையில் தொடங்கியது. தினமும் 100 மனநலம் பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதுவரை 900 பேருக்கு தடுப்பூசி போடட்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``ஆதரவின்றி கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் சிகிச்சையில் இருந்து வரும் 900 மனநலம் பாதித்தோருக்கு முதல்தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் அனைவருக்கும் 2-ம் தவணை கரோனா தடுப்பூசியும் போடப்படும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்