கரோனா பாதித்த அதிமுக எம்எல்ஏவை திமுகவினர் புகைப்படம் எடுத்ததால் தகராறு :

By செய்திப்பிரிவு

காரைக்கால்: காரைக்கால் தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான கே.ஏ.யு.அசனாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், தேர்தலுக்கு முன்னதாக சில நாட்கள் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் வீட்டுத் தனிமையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, பாதுகாப்பு கவச உடையுடன், காரைக்காலில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியில் வந்தார்.

அப்போது, திமுக பிரமுகர்கள் முகமது ஹுசைன்(62), சுலைமான்(61) ஆகியோர், அவரை செல்போனில் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை எம்எல்ஏ தரப்பினர் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் முகமது ஹுசைன், சுலைமான் ஆகிய இருவர் மீதும் காரைக்கால் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்