தேர்தல் வாக்குப் பதிவின்போது அத்துமீறுபவர்களை - காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஆணையர் அறிவுரை :

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவின்போது, அத்துமீறுபவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க துணை ராணுவப்படையினருக்கு காவல் ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் துணை ராணுவப்படையினருடன் இணைந்து சென்னை போலீஸார்சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் காலை, மாலை நேரங்களில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள், தெருக்கள், முக்கிய சாலைகள்தோறும் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் உட்பட பிற மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள போலீஸாரும் கொடி அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர். நேற்று ஆயிரம்விளக்கு, பூந்தமல்லி, துரைப்பாக்கம் உட்பட பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ஆரம்பத்தில் ஒரு சில இடங் களில் மட்டுமே நடைபெற்ற கொடி அணிவகுப்பு, தற்போது தினமும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. நாளை காலை வாக்குப் பதிவுநடைபெறுவதால் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுவப் படையினர் எங்கு பணியில் ஈடுபடவேண்டும் என்ற விபரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

வாக்குச் சாவடிக்குள் அத்து மீறி நுழைபவர்கள், தேவையற்ற முறையில் சுற்றி திரிபவர்களை பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க துணை ராணுவப்படையினருக்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்