அந்நிய செலாவணி பங்கு வர்த்தகத்தில் - முதலீடாக பணத்தை பெற்று மோசடி போலி நிறுவனம் நடத்திய 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

அந்நிய செலாவணி பங்கு வர்த்தகத்தில் கோடிக்கணக் கில் முதலீடாக பணம் பெற்று மோசடி செய்ததாக போலி நிறுவன இயக்குநர்கள் 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய் துள்ளனர்.

சென்னை திருவேற் காட்டைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், தேனாம் பேட்டை, ஆலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சையது அபுதாகிர், கடலூர் மாவட்டம், சிதம்பரம், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த சையது அலி ஹூசைன் ஆகிய இருவரும் வெளிநாட்டு தொலைபேசி வாயிலாக தன்னை தொடர்பு கொண்டு, தங்களை பிரபல தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள் என்றும் தாங்கள் ஆன்லைன் மூலம் அந்நிய செலாவணி பங்கு வர்த்தகத்தை செய்து வரு வதாகவும் தங்களுடைய நிறு வனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.

இதை உண்மை என்று நம்பி நான் ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்தை முதலீடாக கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் லாபத்தை கொடுக்காததுடன், செலுத்திய பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டனர். எனவே, எனது பணத்தை திரும்ப பெற்றுத் தருவதோடு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என குறிப்பிட்டு இருந் தார்.

இதுகுறித்து மத்திய குற் றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத் தினர். இதில், அசோக் குமார் புகார் மனுவில் குறிப்பிட்டு இருப்பது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து சையது அபுதாகிர், சையது அலி ஹூசைன் ஆகிய இருவரையும் கைது செய் தனர். இவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரம், 5 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘கைது செய்யப் பட்ட இருவரும் போலியான வலைதள பக்கத்தை உரு வாக்கி வெளிநாட்டு தொலை பேசி எண்களை பயன் படுத்தி பணம் பறித்துள் ளனர். இவர்கள் நூற்றுக் கணக்கானோரை இதே போல ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் பறித்துள் ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

22 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்