கவுண்டம்பாளையம் தொகுதி : திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு :

By செய்திப்பிரிவு

கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் காளப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவரும், திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளருமான ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

இவர் நேற்று காலை மருதமலை முருகன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, பிரச்சாரத்தை தொடங்கினார். கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தான் வெற்றி பெற்றால், அப்பகுதியில் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அவர் உறுதியளித்தார். அவருடன், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, கொமதேக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

45 mins ago

வாழ்வியல்

36 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்