கருணாநிதி பெயரில் : செம்மொழி விருதை மீண்டும் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி :

By செய்திப்பிரிவு

தந்தை பெரியார் திராவிடர் இயக்கத் துணைத் தலைவரும், வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2004-ம் ஆண்டு சென்னையில் செம்மொழிதமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போதுமுதல்வராக இருந்த கருணாநிதி, அந்த நிறுவனத்துக்கு தன் சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடியை வழங்கினார். அந்த நிதியின் மூலம் தமிழ் வரலாறு குறித்த பயனுள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது என்ற பெயரில் கடந்த 2010 வரை விருது வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த விருது வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே இந்த விருதை மீண்டும் வழங்கஉத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி,நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், விருது வழங்குவது என்பது அரசியல் ரீதியிலான முடிவாக உள்ளது. எனவே இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்