நடப்பாண்டில்25 தொடக்கப் பள்ளிக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி நடப்பு கல்வியாண்டு (2020-21) முதல் குடியிருப்பு பகுதிகளில் 25 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல், 10 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி ஆரம்பப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுகிறது.

புதிதாக தொடங்கப்படும் 25தொடக்கப் பள்ளிகளுக்குத் தேவையான 25 தலைமையாசிரியர் மற்றும் 25 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக இருப்பவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.

அதற்காக 10 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக தரம் உயர்த்தி ஆணையிடப்படுகிறது. மேலும், உபரியாக உள்ள 30 பட்டதாரி ஆசிரியர்களை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் படிப்படியாக இடமாறுதல் மூலம் பணிநியமனம் செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை பின்பற்றி உரிய நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்