புதுச்சேரியில் தனியார் மய முடிவை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின்முடிவை எதிர்த்து புதுச்சேரி மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் சங்கங்கத்தினர் ஒன்றிணைந்து போராட்டக்குழுவை உருவாக்கி, போராட் டக்குழு சார்பில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மின்துறை கண்காணிப்பு பொறியாளர், ஆட்சியர், மின் துறை செயலர் ஆகியோரின் எச்சரிக்கையையும் மீறி 2-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. மின்துறை ஊழி யர்களின் போராட்டத்தால் புதுவை முழுவதும் கட்டண வசூல் மையங்கள் மூடப்பட்டுள்ளன. மின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி முதல்வர் நாராயண சாமியிடம் கேட்டதற்கு, “மின் விநியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு புதுச்சேரி மாநில அரசுக்கு உடன்பாடு இல்லை. அதை முழு வதுமாக எதிர்ப்பதால் மின்துறை ஊழியர்கள் மக்களுக்கு இடையூறான போராட்டத்தில் ஈடுபடு வதை தவிர்த்து மத்திய அரசை எதிர்த்து போராடலாம். அல்லது சட்ட ரீதியாக சந்திக்கலாம். ஆகவேபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். ஆட்சியாளர்களோ, மக்களோ எதிரிகள் அல்ல. மத்திய மின்துறை அமைச்சரை பொங்கலுக்கு பிறகு தொழிற்சங்க பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்” என்று குறிப் பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

30 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

56 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

54 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்