திமுக தேர்தல் அறிக்கை பொதுமக்களிடம் கருத்துகேட்பு

By செய்திப்பிரிவு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, டிச.4-ம் தேதி முதல் பொதுமக்களின் கருத்துகளை கேட்கவுள்ளது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 8 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு ஏற்கெனவே 2 கட்டங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுநலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், பொதுமக்களின் நலனுக்காக செயல்படும் அமைப்புகளின் நிர்வாகிகளைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டது. அதன் தொடர்ச்சியாக டிச.4 முதல் பொதுமக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்க உள்ளது. அதன்படி முதல்கட்டமாக, டிச.4-ம் தேதி மாலை 4 மணிக்கு கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, 5-ம் தேதி காலை 9 மணிக்கு நாகை வடக்கு, நாகை தெற்கு, மாலை 4 மணிக்கு திருவாரூர், 6-ம் தேதி காலை 9 மணிக்கு தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு, மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, 7-ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மாலை 4 மணிக்கு அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்க இருப்பதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்