ஷட்டர்கள் பழுதால் - ஆனைக்குட்டம் அணை நீர் வீணாகிறது :

By செய்திப்பிரிவு

ஆனைக்குட்டம் அணையின் உயரம் 7.50. மீட்டர். விருதுநகர் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள இந்த அணையின் மூலம் ஆனைக்குட்டம் கிழத்திருத்தங்கல், முத்துலிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை பெய்தபோது அணையில் ஷட்டர்கள் பழுதானதால் நீர் முழுவதும் வெளியேறியது. அதைத் தொடர்ந்து, ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு சரி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், ஷட்டர்கள் அடைக்கப்பட்டன. ஆனாலும், 5-வது, 7-வது ஷட்டர்கள் வழியாக தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது.

அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்