வந்தவாசி அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் - 2 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த நிலையில் மீட்பு : காவல் துறையினர் விசாரணை

By செய்திப்பிரிவு

வந்தவாசி அருகே ஏரியில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற தொழிலாளியின் உடல் 2 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த நிலையில் நேற்று மீட்கப் பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கன்னியப்பன்(40), சின்னராசு(25). பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், முளைப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரிக்குமீன் பிடிக்க கடந்த 3-ம் தேதி சென்றுள்ளனர். அதில், கன்னியப்பன் மட்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சின்னராசுவுடன், கன்னியப்பனை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த் துள்ளனர். ஆனாலும், கன்னியப்பன் கிடைக்கவில்லை.

உறவினர்கள் சாலை மறியல்

இதற்கிடையில், மின்வேலி யில் சிக்கி கன்னியப்பன் உயிரிழந் திருக்கலாம் என கூறி, வந்தவாசி – தேசூர் சாலையில் நேற்று முன் தினம் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், உடலை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் முளைப்பட்டு ஏரியில், கன்னியப்பன் உடலை தேடும் பணியில் வந்தவாசி தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசூர் காவல்துறையினர் நேற்று ஈடுபட்டனர். 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, ஏரியின் நடு பகுதியில் இருந்து கன்னியப்பன் உடல் மீட்கப்பட்டுள்ளது. அப்போது, ஏரியில் உள் பகுதியில் இருந்த மரத்தில், கன்னியப்பன் உடலை அவர் அணிந்திருந்த லுங்கியை கொண்டு கட்டி வைத் திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து தேசூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கன்னியப்பன் உயிரிழப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்