தமிழக - கேரள எல்லையில் - கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதியில் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணத்தை சரிபார்த்த பிறகே மக்கள் வர அனுமதிக்கப்படுகின்றனர். தடுப்பூசி போடாதவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

குமுளியில் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், தாமரைக்கண்ணன் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், டாக்டர் சாம்ஜிரேவந்த் உள்ளிட்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சி, வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தினமும் இப்பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

க்ரைம்

24 mins ago

விளையாட்டு

53 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்