விருதுநகரில் கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட - மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நீக்கம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள், சுகாதார ஆய் வாளர்கள், பல்நோக்குப் பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, தங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவிடக் கோரியும், 4 மாத ஊதிய நிலு வையை வழங்கக்கோரியும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.

அப்போது அங்கு வந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனி டமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனுக்களை வழங்கினர்.

பின்னர், அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதை யடுத்து, அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். மனுக் கள் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தாக அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்