300 ஆண்டுக்கு முந்தைய அற்புத ஓவியங்களால் - மாணவர்களை கவரும் ராமநாதபுரம் அரண்மனை :

By செய்திப்பிரிவு

உலக மரபு வாரத்தையொட்டி, ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையை கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்.

ராமலிங்க விலாசம் அரண்மனையை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1978-ல் இருந்து பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. இந்த அரண்மனை 17 மற்றும் 18-ம் நூற்றாண்டின் பண்பாடு, நாகரீகம், அரசியல், சமயம், சமுதாயம் மற்றும் நுண்கலைகளை அறிந்துகொள்ளும் வரலாற்று கருவூலமாக திகழ்கிறது.

இந்த அரண்மனையின் சுவர்களிலும், மேல் விதானங்களிலும் கி.பி. 18-ம் நூற்றாண்டின் தொடக்கம் சார்ந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை சேதுபதி மன்னரின் அரசியல் வாழ்வை விளக்கும் காட்சிகள், மன்னரின் அன்றாட நடைமுறைகள், பொழுது போக்குகள், ராமாயணம், பாகவதக் காட்சிகள், தமிழ கத்தின் முக்கிய சமயத்தலங்கள் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.

உலக மரபு செல்வங்களை பாதுகாக்க, ஐ.நா. வின் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் 1988 நவ.19 முதல் 25-ம் தேதி வரை உலக மரபு வாரமாக கடைப்பிடித்து வருகிறது. இதையொட்டி, கடந்த ஒருவாரமாக ராமலிங்க விலாசம் அரண்மனையை இலவசமாக பார்வையிட அனுமதிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரண்மனையை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்