மயிலாடுதுறையில் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பியர்லெஸ் தியேட்டர் சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்துக்கு நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், பொறையாறு, நாச்சியார்கோவில், நன்னிலம் வழித்தட பேருந்துகள், நகரப் பேருந்துகள், மினி பேருந்துகள் வந்து செல்கின்றன. மயிலாடுதுறையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவ-,மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையின் வழியாகத்தான் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

500 மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள இந்த சாலை தற்போது மிகவும் சேதம் அடைந்துள்ளது. மேலும் குண்டும் குழியுமாகி மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே, உடனடியாக நகராட்சி ஆணையர் இச்சாலையை தரம் உயர்த்தி சீரமைத்து தர வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்