ராமேசுவரம் கடலோர பகுதியில் பரவலாக மழை :

By செய்திப்பிரிவு

ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை மையம் அறிவித் திருந்தது. இதனைத் தொடர்ந்து ராமேசுவரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மரைக்காயர்பட்டினம், வேதாளை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நேற்று விட்டுவிட்டுப் பரவலாக மழை பெய்தது.

ராமேசுவரத்தில் பெய்த மழையால் நகராட்சி அலுவலகம் பகுதி, லெட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், தென்குடா பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ராமேசுவரத்தில் அதிகபட்சமாக 54.2 மி.மீ, தங்கச்சிமடத்தில் 40.6 மி.மீ, மண்டபத்தில் 33.6 மி.மீ, பாம்பனில் 31.5 மி.மீ மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்