சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கயத்தாறில் மறியல்- 49 பேர் கைது :

By செய்திப்பிரிவு

மதுரை - திருநெல்வேலி தேசியநான்குவழிச் சாலையில் கயத்தாறு அருகே சாலைப்புதூர் பகுதியில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச் சாவடியில் கயத்தாறு மற்றும்சுற்றுவட்டார கிராம பகுதிமக்கள் தங்களது வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தாமல் சென்று வந்தனர். நாடு முழுவதும் பாஸ்டாக் முறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கயத்தாறு சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம்வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்குஉள்ளூர் வியாபாரிகள் மற்றும் கிராமப்புற மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கயத்தாறு சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது.

நேற்று காலை ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் எம்.சாலமன்ராஜ் தலைமை யில் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் கயத்தாறு ஊரில் இருந்து சுங்கச்சாவடியை நோக்கி வாகனங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். சுமார் 50 மீட்டர் தூரம் வந்த நிலையில் கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்ளிட்ட 49 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து கோட்டாட்சியர் சங்கர நாராயணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உள்ளூர் வாகனங்களுக்கு சலுகைகள்வழங்குவதாக சுங்கச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். இப்பிரச்சினைகுறித்து ஆட்சியரின் கவனத்துக்குகொண்டு செல்லப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார். போராட்டத்தை ஒத்திவைப்பதாக ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

மேலும்