12 ஆண்டுகளுக்குப் பின்னர் - தளி அருகே நிரம்பிய சித்தேகவுடு ஏரி : சிறப்பு பூஜை செய்து வழிபட்ட கிராமமக்கள்

By செய்திப்பிரிவு

தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே மாருப்பள்ளி கிராமத்தில் உள்ள சித்தேகவுடு ஏரி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பியுள்ளதால், கிராமமக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த அதிகனமழையில் இங்குள்ள ஏரிகள் நிரம்பி உள்ளன.

குறிப்பாக மாருப்பள்ளி கிராமத்தில் உள்ள சித்தேகவுடு ஏரி 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி உள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த கிராமமக்கள் சித்தேகவுடு ஏரியில் மலர் தூவி, ஏரிக்கரையில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

ஆண்டுதோறும் மழை பெய்து ஏரி நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சித்தேகவுடு ஏரிக்கரையில் தேஜஷ்மூர்த்தி சாஸ்திரிகள் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இப்பூஜையில் மாருப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்