நாடு சண்முக வேலாயுத சுவாமிக்கு குரு பூஜை - நந்திகேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி வெள்ளாழ வீதியில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர் கோயிலில் சமாதி கொண்டுள்ள அருள்தரும் நாடு சண்முக வேலாயுத சுவாமி யின் 113-வது குரு பூஜையை முன்னிட்டு கங்கைவிநாயகர் 108 போற்றி வேள்வி கடந்த நவ. 18-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது.

5-ம் நாள் விழாவில் புதுச்சேரி பாரத் குழுவினரின் தாள வாத்திய அஞ்சலி, புதுச்சேரி சகோதரிகள் குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் சங்கரிதேவியின் சொற்பொழிவு நடை பெற்றது. இறுதியாக நேற்று முன்தினம் காலை குருபூஜை வேள்வி, கலச வழிபாடு, புனித நீர் வழிபாடு, பேரொளி வழிபாடு, மாகேஸ்வர பூஜை, அன்னம் பாலிப்பு நடைபெற்றது.

மாலை நந்திகேஸ்வரர் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவை முன்னிட்டு மணக்குள விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், நாடு சண்முக வேலாயுத சுவாமிகளால் அருளப்பெற்று, திவான் கந்தப்பா குடும்பத்தினரால் நன்கொடையாக அளிக்கப்பெற்ற இந்திர ஞான தங்கரதத்தில், வெள்ளாழ வீதியில் உள்ள நத்திகேஸ்வரர் திருக்கோயிலுக்கு எழுந்தருளினார்.

அங்கு நத்திகேஸ்வரர் பெருமானுக்கும், மணக்குள விநாயக பெருமானுக்கும் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார், பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய குரு மகா சன்னிதானம் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், நாடு சண்முக வேலாயுத சுவாமிகள் அறக்கட்டளை நிர்வா கிகள் தலைமையில் சிறப்பான பூஜைகள் நடைபெற்றன.

மேலும் இவ்விழாவில் அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், மணக்குளவிநாயகர் கோயில் தேவஸ்தான உறுப்பினர்க ளும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்த தேரில் நத்திகேஸ்வரர் பெருமானுக்கு மார்கழி மாதம் ஆருத்ரா அன்று ஆண்டுதோறும் வீதி உலா உற்சவம் நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

தமிழகம்

51 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்