நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு :

By செய்திப்பிரிவு

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், கடந்த 7-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, தேவர் அய்யா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூ.1,001 வழங்கப்படும்’ என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு அமைதி மீறுதலை தூண்டும் வகையிலும், குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது.

எனவே, இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடைவீதி போலீஸார் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல், இரு தரப்பினரிடையே மோதலை தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 mins ago

இந்தியா

5 mins ago

சினிமா

11 mins ago

ஓடிடி களம்

43 mins ago

கல்வி

57 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்